Wednesday, 30 September 2015

boggersmeet 2015 @gmail.com

             
                                                             இயந்திரங்கள்

                 
              வீதிக்கொரு  பள்ளிகள்                          
           
              தொழிற் சாலைகளாய்          

               தரமான  இயந்திரங்கள்    

               தயாரிக்கும்  பணியில்
 

               மருத்துவர்கள்  பொறியாளர்கள்  

               காவலர்கள்  ஆசிரியர்கள்  

               ஆராய்ச்சியாளர்கள்  தலைவர்களென  

               விதவிதமான இயந்திரங்கள்  

               சமூகத்திற்கு  வந்ததால்

               
                அறம் தழுவிய   வாழ்க்கை

                கரம்  நழுவி  வீழ்ந்தது  

                 பகிர்ந்து  கொள்ளும்   பண்பாடு



                 மதுபானக்  கோப்பைகளில்


                கல்வி   கற்றலின் ஈடுபாடு   
               
                தொழில்நுட்ப க்   களவுக்கு

                வீணில்  உண்டு   களித்திருக்க

                செயின் பறித்து

                உழவுக்கும்  தொழிலுக்கும்   

                உழைப்பவனை    கொன்று குவித்து

               
                 ஆண்களுக்கு கம்மல் போட்டு

                 பெண்களுக்கு  ஆடை குறைத்து

                 உலகம் கலகமாக மாறுகிறது


                  தாய்மொழி மறந்து

                  வாய் வேறுமொழி பேசும்

                  பண்பாடு மறந்த நாகரிகம்

                  தாயின் கழுத்தை நெறித்து

                  எதை சாதிக்க துடிக்கிறது ?
                                                                   

உறுதிமொழி


                 1.படைப்பு எனது சொந்த படைப்பு
                 2.இப்படைப்பு தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015
                     புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு - தமிழ் இணையக்
                     கல்விக் கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்
                     2015" இக்காகவே எழுதப்பட்டது ,
                  3.இதற்குமுன் வெளியான படைப்புகளின் முடிவு வெளிவரும்
                     வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிமொழி
                      கூறுகிறேன் .
                 


                   

                                   


     
                          

1 comment:

  1. ஆத்தாடி சூப்பர்மா....வெற்றி பெற வாழ்த்துகள்...

    ReplyDelete