இயந்திரங்கள்
வீதிக்கொரு பள்ளிகள்
தொழிற் சாலைகளாய்
தரமான இயந்திரங்கள்
தயாரிக்கும் பணியில்
மருத்துவர்கள் பொறியாளர்கள்
காவலர்கள் ஆசிரியர்கள்
ஆராய்ச்சியாளர்கள் தலைவர்களென
விதவிதமான இயந்திரங்கள்
சமூகத்திற்கு வந்ததால்
அறம் தழுவிய வாழ்க்கை
கரம் நழுவி வீழ்ந்தது
பகிர்ந்து கொள்ளும் பண்பாடு
மதுபானக் கோப்பைகளில்
கல்வி கற்றலின் ஈடுபாடு
தொழில்நுட்ப க் களவுக்கு
வீணில் உண்டு களித்திருக்க
செயின் பறித்து
உழவுக்கும் தொழிலுக்கும்
உழைப்பவனை கொன்று குவித்து
ஆண்களுக்கு கம்மல் போட்டு
பெண்களுக்கு ஆடை குறைத்து
உலகம் கலகமாக மாறுகிறது
தாய்மொழி மறந்து
வாய் வேறுமொழி பேசும்
பண்பாடு மறந்த நாகரிகம்
தாயின் கழுத்தை நெறித்து
எதை சாதிக்க துடிக்கிறது ?
உறுதிமொழி
1.படைப்பு எனது சொந்த படைப்பு
2.இப்படைப்பு தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015
புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு - தமிழ் இணையக்
கல்விக் கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்
2015" இக்காகவே எழுதப்பட்டது ,
3.இதற்குமுன் வெளியான படைப்புகளின் முடிவு வெளிவரும்
வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிமொழி
கூறுகிறேன் .